2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பழனி வேலனுக்கு வேல் கொடுத்த ரஷ்யர்கள்

Freelancer   / 2024 நவம்பர் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழனி முருகன் கோவிலுக்கு,  6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த பெண்கள் உட்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் ரஷ்ய பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (26) காலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X