2026 மார்ச் 07, சனிக்கிழமை

பாஜகவின் கூட்டணியை தோல்வியுறச் செய்ய வேண்டும்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தல் எழுந்துள்ளது. இதை டெல்லியில் மத்திய அரசிற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

டெல்லியின் மூன்று எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் போராடி வருகின்றனர். நாளை மறுதினம்  மார்ச் 6 இல் விவசாயிகள் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது.

இதற்காக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களின் சுமார் 40 விவசாய சங்கங்கள் இணைந்து ‘சன்யுக்த் கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்)’ எனும் பெயரில் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

தனது போராட்டத்தில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை எஸ்கேஎம் முன்னிறுத்தி உள்ளது. இவர்கள் போராட்டத்தின் தாக்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் ஏற்படத் தொடங்கிவுள்ளது.

இந்தத் தேர்தல் குறித்து சிங்கு எல்லையில் நடைபெற்ற எஸ்கேஎம் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோல்வியுறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .