2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சிபுரம்:

பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்து ள்ளார்.  

மேலும் கருத்து தெரிவித்த தொல் திருமாவளவன்; "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கும்போது, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்திருக்கிறார்.

உடல் நலம் சரியில்லை என்று சொன்னவர், திடீரென அரசியல் கட்சி தொடங்கியிருப்பது, அச்சுறுத்தல் காரணமாக எடுத்த முடிவாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற சக்திகளின் நெருக்கடியால் தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாகவும்  தெரிவித்த திருமாவளவன், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு முகமாக இருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .