2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலை குடிநீரில் விஷம் கலப்படம்

Freelancer   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பாடசாலையில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவமொன்று,தெலங்கானாவில் இடம்பெற்றுள்ளது.

 தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர் விடுமுறைக்கு பிறகு, செவ்வாய்க்கிழமை (15) பாடசாலைகள் திறக்கப்பட்டன.

தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் 30 மாணவ, மாணவியரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். இதற்கு சற்று முன்னதாக பாடசாலைக்கு வந்த மதிய உணவு திட்ட ஊழியர்கள், பாத்திரங்களை கழுவ முடிவுசெய்து, குழாயில் இருந்து தண்ணீரை திறந்தபோது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது.

உடனே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை பார்த்தபோது, அதுவும் நிறம்மாறி துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே மாணவர்கள் யாரும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என தலைமை ஆசிரியர் எச்சரித்தார். இது குறித்து இச்சோடா பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

பொலிஸார் விரைந்து வந்து நிபுணர்கள் மூலம் தண்ணீரை சோதனையிட்டதில், அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது அம்பலானது.

இதுபற்றி அறிந்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாடசாலைக்கு முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இச்சோடா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .