2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பாடசாலை சத்துணவு கூடத்தில் யானையின் எலும்புக்கூடு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 31 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோயம்புத்தூரில் உள்ள  பாடசாலை சத்துணவுக்  கூடமொன்றில்  யானையின் எலும்புக்கூடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், தேர்தல் மையத்தை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆரம்பப் பாடசாலையொனறு  உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலையை தேர்தல் அதிகாரிகள் நேற்று முன் தினம்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள சத்துணவுக் கூடத்தில் சிதைந்த நிலையில் யானைக் குட்டியொன்றின் உடல் இருப்பதைப் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் சிதைந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,” போதிய மாணவர் சேர்க்கை இல்லாததாலும், ஊரடங்காலும் இப் பாடசாலை நீண்டநாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அங்கிருந்த துளை வழியாக சத்துணவு கூடத்தில் உள்ள அரிசி மற்றும் தானியங்களை உண்ண குட்டியானை உள்ளே வந்திருக்கலாம். பின்னர் வெளியே செல்ல வழியில்லாமல் சத்துணவு கூடத்திலேயே உயிரிழந்திருக்கலாம். குட்டியானை இறந்து சில மாதங்கள் இருக்கும்’ எனத்  தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .