Editorial / 2024 ஜனவரி 31 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலையும் மார்ச் 1-ம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பாராளுமன்ற தாக்குதல் தினமான டிசெம்பர் 13ம் திகதி, பலத்த பாதுகாப்பையும் மீறி இரண்டு நபர்கள் மக்களவைக்குள் நுழைந்தனர். பார்வையாளர் மாடத்தில் இருந்து உள்ளே குதித்த அவர்கள் இருவரும், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை (கேனிஸ்டர்) எடுத்து வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறி அவை முழுவதும் பரவியது. அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்ணொருவரும்,பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் காவல் நிறைவடைந்த நிலையில் புதுடெல்லி நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் நீதிமன்றக் காவலை மார்ச் 1-ம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் ஆகிய ஐந்து பேர், காவல்துறை மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
விசாரணையின்போது பொலிஸார் எங்களை மிகவும் துன்புறுத்தினர். 70 வெற்று பேப்பர்களில் கையெழுத்துபோடும்படி கட்டாயப்படுத்தினர். உபா சட்டப்பிரிவு மற்றும் தேசிய அரசியல் கட்சிகளுடன் தொடர்பு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டு கையெழுத்திடும்படி சித்ரவதை செய்தனர். மின்சார அதிர்ச்சியும் கொடுத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை பெப்ரவரி 17-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago