2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் வன்கொடுமை செய்தவரை பூட்டிவைத்த பெண்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில்  மெஸ்ருலி என்ற பகுதியில் 30 வயதான  பெண்ணொருவர் வசித்து வந்துள்ளார்.

தனியார் விமான நிறுவனமொன்றில் பணிப்பெண்ணாக பணியாற்றிவரும் அவர், கடந்த 2 மாதங்களாக பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த  ஆண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தினத்தன்று குறித்த பெண்ணின் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ள அந்நபர் அப்பெண்ணைப்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் அந்நபரை தனது வீட்டின் அறையில் வைத்து பூட்டிவைத்து விட்டு இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.  

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அந் நபரைக்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X