2026 மார்ச் 07, சனிக்கிழமை

பா.ஜ. எம்பியின் சடலம் தொங்கிய நிலையில் மீட்பு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 17 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி:

இமாச்சல் பிரதேச பா.ஜ., எம்பி ராம் ஸ்வரூப் ஷர்மா உடல் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்த பா.ஜ., எம்.பி., ராம் ஸ்வரூப் ஷர்மா, 62, டில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அருகேயுள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் மனைவியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று (17) காலையில், அவரது மனைவி கோவிலுக்குச் சென்றிருந்த சமயத்தில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ராம் ஸ்வரூப் ஷர்மா, கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஏற்கனவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதும் தெரிய வந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .