A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
மஹாராஷ்டிராவில், பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த, பல்வேறு வழிகளிலும் பா.ஜ., தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
மஹா., சட்டசபைக்கு, 2019இல் நடந்த தேர்தலுக்குப் பின், பா.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி, மஹா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி, ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கட்சியை வலுப்படுத்தும் பணியில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, மஹாராஷ்டிரா சென்றார்.
சிந்துதுர்க் மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லுாரி திறப்பு விழாவில், அமித் ஷா பேசியதாவது:காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததன் வாயிலாக, பால் தாக்கரேவின் அடிப்படை கொள்கையையே உத்தவ் தாக்கரே சிதைத்துவிட்டார்.
கடந்த, 2020 ஜூனில், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்கள், 'நிசர்கா' புயலால் பாதிக்கப்பட்ட போது, முதல்வர் உத்தவ் தாக்கரே ஒருமுறை கூட நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026