2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’பிரதமர் மோடி அறிவித்தது வெறும் வெற்று அறிவிப்பு தான்’

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகங்கை

‘‘பிரதமர் மோடி அறிவித்தது எல்லாம் சும்மா வெறும் வெற்று அறிவிப்பு தான்’’ என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை வீரகாளியம்மன் கோவிலில் சீமான் குலதெய்வ வழிபாடு செய்தார். மேலும், அவரது மகன் பிரபாகரனின் காதணி விழாவும் நடந்தது. இவ்விழாவில் 108 கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெல் மூடைகளை வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் விளைவித்தவன் கடனாளியாக இருக்கிறான்.

ஒவ்வொரு முறையும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே தொடர்வான். அடிப்படையிலுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு, அவரே விலை நிர்ணயிக்க வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் எல்லாம் சும்மா வெறும் வெற்று அறிவுப்பு தான்.

மதுரையில் ரூ.20 இலட்சம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கினார். இதுவரை வரவில்லை. அதேபோல் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் வெற்று அறிவிப்பாக தான் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .