2025 மே 09, வெள்ளிக்கிழமை

பிரியாணிக்கு கார் பரிசு

Mithuna   / 2024 ஜனவரி 03 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் செப்டம்பர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டது.

அதில் பிரியாணி சாப்பிட்டால் மாபெரும் பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தனர். அதன்படி பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கினர்.

பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர். ஒரு பிரியாணியின் விலை ரூ.279 ஆகும்.

இவர்களில், புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.7 இலட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 31-ந்திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஹோட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் கார் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு காரை பரிசாக வழங்கினர். பிரியாணி சாப்பிட்டதற்கு கார் பரிசா! என்ற ஆச்சரித்துடன் அவரும் பெற்று சென்றார்.

பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X