A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்னா,
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.
இதைத் தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தேர்தலில் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தேஜஸ்வி யாதவ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி இடையேயும் கடும் போட்டி நிலவி வருகிறது. வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மெகா கூட்டணி 111 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக கூட்டணி 113 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .