2026 மார்ச் 07, சனிக்கிழமை

புதுச்சேரியில் நாராயணசாமி அமைச்சரவை இராஜினாமா?

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி:

புதுச்சேரியில் அடுத்தடுத்து 4 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால், நாராயணசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் 30. தனவேலு தகுதி நீக்கம், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இராஜினாமாவை தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ்  கட்சிக்கு தற்போது 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கு 3 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மாகியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் ஆதரவும் ஆட்சிக்கு உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.,வான ஜான்குமாரும் தனது பதவியை இராஜினாமா செய்தார்.  இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இதனால், சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் - 7, அ.தி.மு.க., - 4, பா.ஜ., - 3 என மொத்தம் 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், இரு தரப்பும் சம பலம் உள்ளது. இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, புதுச்சேரி டிஜிபி ரன்விர் சிங், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .