2025 ஜூலை 23, புதன்கிழமை

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”

Ilango Bharathy   / 2022 நவம்பர் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அண்மையில் " மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இடம்பெற்ற யோகா நிகழ்வொன்றில் பாபா ராம்தேவ் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன்போது பாபா ராம்தேவ்  ”பெண்கள் சேலை அணிந்தாலும், சுடிதார் அணிந்தாலும், எதுவும் அணியாமல் இருந்தாலும் கூட அழகாக தான் இருப்பார்கள்"  எனத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது முகம் சுளிக்கும் விதத்தில் இருந்ததாக அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து பாபா ராம் தேவ் தெரிவித்த கருத்துக்குக்  கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க அமைச்சர் மஹுவா மொய்த்ரா ”பாபா ராம்தேவின் எண்ணம் இவ்வாறு இருப்பதற்கு, அவரது கீழ்த்தரமான பார்வையே காரணம் " எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .