2025 ஜூலை 23, புதன்கிழமை

வெளிநாடு செல்லவிருந்த தாயை கள்ளக்காதலன் கழுத்தறுத்து ஏன்? கொன்றார்

Editorial   / 2025 ஜூலை 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்லவிருந்த மூன்று பிள்ளைகளின் 39 வயதான தாயொருவர், தன்னுடைய கள்ளக்காதலனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் இடம்பெற்றுள்ளது.

அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர், கம்பளை பொலிஸில் செவ்வாய்க்கிழமை (22) சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

படுகொலைச் செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன், கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார் எனவும், தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை (22) சென்றுள்ளார் எனவும், அங்கிருந்து தன்னுடைய கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார் எனவும், அதற்கு கள்ளத் தொடர்பை பேணிய நபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்தார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் பாழடைந்த பங்களாவுக்குள் அவரை செவ்வாய்க்கிழமை (22) அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற வேளையிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .