2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வாகன இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Simrith   / 2025 ஜூலை 23 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சந்தை தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

வாகன இறக்குமதியைக் குறைக்க மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று (22) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வீரசிங்க கூறினார்.

"எனக்குத் தெரிந்தவரை, அரசாங்கத்தால் அத்தகைய முடிவு எதுவும் இல்லை. எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவார் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை தொடர்ந்து முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஆளுநர் கூறினார். மத்திய வங்கி கடன் வாங்குபவர்களின் அபாயங்களை திறம்பட நிர்வகித்து வருவதாகவும், நிதித் துறையைப் பாதுகாக்க பேரண்டப் பொருளாதார நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .