2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வடிவேலும் அந்த நடிகையும் ஒரே அறையில்...

Freelancer   / 2025 ஜூலை 23 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேலு பற்றி பல வருடங்களாகவே சர்ச்சை செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அப்பாவி போல் இருந்த இவர் காசு வந்த மயக்கத்தில் ஆடாத ஆட்டம் கிடையாது.

தற்போது இயக்குனர் வி சேகர் அவரைப் பற்றிய சில அதிர்ச்சியான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

குடும்ப பாங்கான படங்களை எடுத்து ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான் இந்த இயக்குனர். இவருடைய எல்லா படத்திலும் வடிவேலு கட்டாயம் இருப்பார். அப்படித்தான் ஒரு படத்தில் இவரும் கோவை சரளாவும் இணைந்து நடிக்க கமிட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அப்போது வடிவேலு இயக்குனரிடம் எதற்காக இரண்டு பேருக்கும் தனித்தனி மேக்கப் ரூம் போட வேண்டும். ஒரு ரூமாக இருக்கட்டும் உங்களுக்கும் செலவு மிச்சம் பட்ஜெட்டை குறைங்க என சொல்லி இருக்கிறார்.

உடனே இயக்குனரும் ஆகா நமக்கு எவ்வளவு நல்லது பண்றாங்க என நினைத்திருக்கிறார். ஆனால் அப்புறம்தான் தெரிந்திருக்கிறது வைகைப்புயலின் நோக்கம் என்ன என்று. அதாவது இருவரும் ஒரே மேக்கப் ரூமில் இருக்கும் போது கதவை சாத்திக்கொண்டு திறக்கவே இல்லையாம்.

உடனே இயக்குனரின் உதவியாளர் வந்து சார் அவங்க கதவை திறக்க மாட்டேங்குறாங்க ரொம்ப நேரம் ஆச்சு என சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு வேலையா பாக்குற என டென்ஷனான வி சேகர் இந்த படத்துல நீ சரளாவுக்கு ஜோடியாக நடிக்க தேவையில்ல என துரத்தி விட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை தற்போது அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உங்களுக்கு புரியுதா வடிவேலுவின் குசும்பு இப்படித்தான் இருக்கும் என நக்கலாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே வடிவேலு அட்ஜஸ்ட்மென்ட் கேட்பார் என்ற செய்திகள் பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு பெரிய இயக்குனர் வெளிப்படையாக ஒரு சம்பவத்தை கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .