2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பேரணி நடத்தி மக்களைக் கொல்கிறது பாஜக

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பேரணி நடத்தி மக்களை பாஜக கொல்கிறது’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம், ராணிகஞ்ச் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

 அவர்மேலும் கூறியதாவது:மக்களிடம் பாஜக பொய் கூறுகிறது. அக்கட்சி பேரணி நடத்தி, மக்களைக் கொல்கிறது. மாநிலத்தில் உள்ள சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கங்களை முறைப்படுத்து மாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தேன். அவ்வாறு செய்தால், பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், இதுதொடர்பாக, அரசிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களைக் கையப்படுத்த பாஜகவினர் என்ற பெயரில் பல மாஃபியா குழுக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு மத்திய பாஜக அரசு அந்த சுரங்கங்களை விற்பனை செய்வதை திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .