A.K.M. Ramzy / 2020 நவம்பர் 06 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றைக் காரம் காட்டி 30 நாள்கள் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பேரறிவாளனின் விடுப்பு இம்மாதம் 9 ஆம் திகதியோடு முடிவடைகிறது. எனவே, மேலும் 30 நாள்கள் விடுப்பை நீட்டிக் கோரி அற்புதம்மாள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளது. எனவே விடுப்பு காலத்தை நீடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவச் சிகிச்சையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கான விடுப்பை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டனர்.
28 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago