A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழுபேரின் விடுதலையை வலியுறுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது;
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
இதேவேளை, அவர்களை விடுவிக்க அதிமுக அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும் திமுகவின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும் ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது.
ஆகவே, அந்தத் தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018 அன்று, பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று, ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்".என்று அக்கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago