Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 04 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து போக்குவரத்துத் திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தெலுங்கானா மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம் பெண்கள் முன் எப்போதும் விட அதிகமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத் அருகே உள்ள ஷஹீராபாத்தில் இருந்து சங்காரெட்டிக்கு செல்ல இருந்த பேருந்திற்காக ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் குவிந்தனர்.
அப்போது பெண் ஒருவர் இருக்கை பிடிப்பதற்காக தனது கைக்குட்டையை (கர்சீப்பை) இருக்கையில் போட்டுள்ளார். ஆனால் பேருந்திற்குள் ஏறிப் பார்த்த போது அந்த இருக்கையில் வேறொரு பெண் அமர்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய அந்த பெண் தான் கைக்குட்டையை போட்ட இடத்தில் எப்படி நீ உட்காரலாம் என கேள்வி எழுப்பியதுடன், திடீரென சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
அந்த பெண்ணும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு பதில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இருவரும் முடியைப் பிடித்துக் கொண்டு தாக்கிக் கொண்ட குடிமிப்பிடி சண்டையால் அருகில் இருந்த குழந்தைகள் கதறி அழுதனர். பேருந்து ஓட்டுனர், நடத்துனர், சக பயணிகள் ஆகியோர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
6 hours ago
6 hours ago