2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் தாக்கியதில் வேடிக்கை பார்த்தவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் லத்தியால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் புறநகர் மாவட்டம்,  மாதநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் `பலராம்`.

இந்நிலையில் அண்மையில்  குறித்த பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் சிலர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

இதனை அறிந்த பொலிஸார் தகராறு செய்தவர்களை லத்தியால் விரட்டி அடித்துள்ள நிலையில், அதனை வேடிக்கைப்  பார்த்து கொண்டு இருந்த பலராமையும் பொலிஸார்  லத்தியால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (26) உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X