Ilango Bharathy / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் மயங்கி விழுந்து மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். 36 வயதான இவர் தனது 12 வயது மகனுக்கு நேற்று முன்தினம் கிணற்றில் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார்.
சுமார் 60 அடி ஆழமுடைய குறித்த கிணற்றில் சுமார் 40 அடி ஆழத்துக்கு நீர் இருந்துள்ளது. இந்நிலையில் இளைப்பாறுவதற்காக சேகர் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றுள்ளார்.

அப்போது திடீரென அவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதை பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்து "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மக்கள் அவரைக் காப்பாற்றுவதற்கு முன்பாகவே மகன் கண் முன்னே சேகர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
4 minute ago
12 minute ago
33 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
33 minute ago
55 minute ago