Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூன் 10 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடி, தனது புதிய அமைச்சரவையில் முன்பு இருந்தது போலவே மூன்று தமிழர்களை தேர்ந்தெடுத்துள்ளார். அந்தவகையில், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கடந்த ஞாயிறன்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் பதவியேற்றனர்.
குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், எல்.முருகன் இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 2019 முதல் 2024 வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய ஜெய்சங்கருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்படும் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அதேபோல் 2019 முதல் 2024 வரை நிதி அமைச்சராக முக்கிய பொறுப்பு வகித்த நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொருளாதார துறை ஒதுக்கப்படும் என கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், புதிதாக யாருக்கும் மோடி அமைச்சரவையில் பொறுப்பு அளிக்கப்படவில்லை.
மேலும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் ஒரு பாஜக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை என்பதால், மோடி அமைச்சரவையில் பொறுப்பேற்ற மூன்று தமிழர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பிற மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்தும் எல்.முருகன் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago
8 hours ago
17 Mar 2025