2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மணிப்பூரில் குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 60 சட்டசபைத்  தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் நாளையும்(28)  மார்ச் மாதம் 6 ஆம் திகதியும்   2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் நேற்றைய தினம் (26) நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில், சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலேயே  இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குண்டுவெடிப்பில்  குழந்தையொன்று  உட்பட 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்  நடைபெறும் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X