2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மது அருந்துவோருக்கு புதிய வகை தண்டனை

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹதாபாத்

குஜராத்திலுள்ள 24 கிராமங்களில், மது அருந்துவோரை தண்டிக்கும் புதிய வகை தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மது அருந்தி வரவோரை  இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் செயற்படுத்தி வருகின்றனர்.

  நாட் சமூகத்தினர், தங்கள் சமூக மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், ஒரு யுக்தியை பின்பற்றி வருகின்றனர்.

  அஹதாபாத் மாவட்டத்தின் மோதிபூரா கிராமத்தில், மது அருந்துவோருக்கு தண்டனையாக, அவர்களிடம் இருந்து, 1,200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர். இது பெரிய தொகை எனக்கூறி இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை, ஒரு இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. இது தற்போது மாநிலத்தின், 24 கிராமங்களில் உள்ள நாட் சமூக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூண்டில் அடைக்கப்படும் அந்த நபர்களுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .