2021 ஜூலை 31, சனிக்கிழமை

முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் கைதாகி விடுதலை

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு, 

பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சோமசேகர் ரெட்டி. இவர், பல்லாரி டவுனில் கடந்த 3 ஆம் திகதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. முஸ்லிம் சமூகத்தினரை எச்சரிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக சோமசேகர் ரெட்டி மீது பல்லாரி பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். அவருக்கு எதிராக பெங்களூரு, பல்லாரியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

அத்துடன் பொலிஸ் டி.ஜி.பி.யிடமும் சோமசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அதே நேரத்தில் முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன்  போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்திருந்தார். 

இதையொட்டி பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்லாரிக்கு    தனது ஆதரவாளர்களுடன் ஜமீர் அகமதுகான் சென்றார்.

ஆனால் பல்லாரி புறநகர் குடுத்தினி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய

நெடுஞ்சாலையில் வைத்து ஜமீர் அகமதுகானையும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் அவரையும், ஆதரவாளர்களையும் குடுத்தினி பொலிஸார் கைது செய்து, அங்கிருந்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது  பொலிஸ் வாகனத்தை ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஜமீர் அகமதுகானை குடுத்தினி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பி.டி.ஹள்ளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அவரிடம் விசாரணை நடத்திவிட்டு பொலிஸார் விடுவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .