2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மனிதாபிமானத்தின் விலை என்ன?

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சென்னை டி.பி. சத்திரம் பகுதியிலுள்ள  கல்லறை தோட்டத்தில் வேலை பார்க்கும் இளைஞர், இரவு மழையில் நனைந்ததால் வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த  டி.பி.சத்திரம் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக விரைந்து வந்து,மயங்கி கிடந்த தோட்ட காவலாளியை  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி தூக்கி, தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார்.

பின்னர் அவரை, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம்  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற பொலிஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரிடையாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை பொலிஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .