2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம்: 24 பேருக்கு 10 ஆண்டு சிறை

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீது மாவோயிஸ்டுகள்   2010 ஏப்ரல் 6-ம் திகதி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், பொலிஸ் அதிகாரி ஒருவரும் 75 மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணையில், பொலிஸார், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் சிலர் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது தெரிய வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (14) தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 24 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தைத் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் ஆவர்.

ராம்பூரிலிருந்து மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் விநியோகிக்கப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 2010 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று ராம்பூர் விரைந்த குழு, 3 பேரை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஆயுத விநியோகத்தில் உத்தர பிரதேச பொலிஸ் அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவ்வழக்குத் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X