Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 02 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவறாக வந்த அழைப்பினால் சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த 16 வயதான மாணவியொருவரே இவ்வாறு ஜான்ரோஸ் என்ற 19 வயதான இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தொலைபேசிக்கு கடந்த ஆண்டு அழைப்பினை ஏற்படுத்திய நபர் ‘ தவறுதலாக அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அம்மாணவிக்கு பலமுறை தொலை பேசி அழைப்பினை ஏற்படுத்தி உரையாடி வந்துள்ளார்.
நாளடையில் அவ் இளைஞரின் காதல் வலையில் விழுந்த மாணவி பலமுறை அவரைத் தனிமையில் சென்று சந்தித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் பாடசாலைக்குச் சென்ற அம்மாணவியை ஆசை வார்த்தை கூறி ஜான்ரோஸ் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் ஜான் ரோஸ் அம்மாணவியைக் கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜான்ரோசை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
24 minute ago
26 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
26 minute ago
26 minute ago