A.K.M. Ramzy / 2021 ஜனவரி 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர்-காங்கேயம் ரோட்டிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார்.
இதில் நிறுவன தலைவரும்,எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்துகொண்டு பேசினார். இதில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் தொடர்பாக எந்த முடிவை எடுக்கவும் தலைவர் என்ற முறையில் எனக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் எங்களுக்கு போட்டியிட ஒரு தொகுதி கிடைத்தது. இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி கேட்டு வலியுறுத்தப்படும்.
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. சிறிய கட்சிகள், அமைப்புகளுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 26 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை திறந்து, கள்ளர், அகமுடையோர், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.அந்த அரசாணை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்ற வேண்டும்என்றார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026