A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்கு கள் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால், மாஸ்டர் திரைப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 13ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த நிலையில், திரைத்துறைக்குச் சாதகமாகத் திரையரங்குகளையும் திறக்கலாம் என்று அறிவித்தது.ஆனால், திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
விஜய் தரப்பிலிருந்து,பாதி திரையரங்கில் மட்டுமே ரசிகர்களை அனுமதித்தால், வசூல் பாதிக்கும். தயாரிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல் பெரிய திரைநட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒளிபரப்பாகும் அதற்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கைக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த பதில்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நினைத்தது விஜய் தரப்பு.
இந்நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீர் என சந்தித்தார். தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago