Freelancer / 2022 மே 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, சிறையிலடைக்கப்பட்ட நபருக்கு பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி உள்ளூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில்,
‘வீட்டின் அலுமாரியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. என் மகனிடம் விசாரித்ததில், அவன் ஒன்லைன் கேம் விளையாடியதையும், அந்த ஆப்பை ரீசார்ஜ் செய்வதற்காக அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுத்தாக கூறினான் என மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர், கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
மேலும், அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எனது மகன் கூறினான். எனவே, பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, பொலிஸார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் பிணைக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் அளித்த உத்தரவில்,
குற்றம்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உறுப்பை தொட்டும், அவரது உதடுகளில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இது, இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாக இருக்க முடியாது. ஆண், பெண் அல்லது மிருகத்துடன் தானாக முன்வந்து உடலுறவு கொள்பவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடும்படியான ஆதாரம் இல்லை. எனவே, கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago