2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சிறை

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அதிமுக ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், இந்திரகுமாரிக்கும் கணவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 - 96 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்தபோது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அரசு சார்பில் ரூ.15.45 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அந்தத் தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறி, ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம், இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனையும் முன்னாள் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது தி.மு.க.வில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .