A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் ரயிலில் ஏறச்சென்ற அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஜாகிர் ஹுசைன் உள்ளார்.நேற்றிரவு கோல்கட்டா செல்வதற்காக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா ரயில் நிலையத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அமைச்சருடன் வந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர். வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாகிர் ஹுசைன் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உட்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026