2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மோடிக்கு ராக்கி அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நாடு முழுவதும் ஒகஸ்ட் 11ஆம் திதி ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதர சகோதரிகளின் உறவை போற்றி அதை அடையாளப்படுத்தும் விதமாக, பெண்கள் தாங்கள் சகோதரராகப் பாவிக்கும் ஆண்களுக்கு கைகளில் ராக்கி கட்டுவது வழக்கம்.

சகோதரரின் நலனை பெண்கள் விரும்பி இந்த ராக்கியை ஆணின் கையில் கட்டுவார்கள். அதேபோல், அந்த பெண்ணின் நலனை காக்கும் சகோதரனாக ஆண் மனதில் உறுதி எடுத்துக் கொள்வார்கள். இந்த பண்டிகை வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி தனது ரக்ஷாபந்தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X