Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோதிரம் வராததால் திருடன் ஒருவன் பெண்ணின் விரலை வெட்டிய சம்பவம் ஜம்பு காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத் தினத்தன்று பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வயலுக்குத் தனியாகச் சென்றுள்ளதாகவும், அப்போது அங்கு மறைந்திருந்த திருடனொருவன் அப்பெண்ணைப் பின்னாலிருந்து பலமாகத் தாக்கியதாகவும், இதனால் அப் பெண் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளதாகவும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண் அணிந்திருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட தங்க ஆபரணங்களை அத் திருடன் கழட்ட முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோதிரத்தைக் கழட்ட முடியாமல் போனதால், ஆத்திரமடைந்த திருடன் விரலை வெட்டி மோதிரத்தை எடுத்துள்ளதோடு, காதணியையும் காதில் இருந்து அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணைசெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago