2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யாசகம்பெறும் மூதாட்டியையும் விட்டு வைக்காத காமுகன்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

  மதுரை:

 மதுரை அருகே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுக இளைஞனை  பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காமுகன் அளவுக்கு அதிமான மதுபோதையில் இந்த செயலை செய்தது தெரியவந்தது.

  சோழவந்தான் மார்கெட் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி சோழவந்தான் கடைவீதிகளில் யாசகம் பெற்று அப்பகுதியில் உள்ள கடை முன் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று இரவு மூதாட்டி வழக்கம்போல் கடை முன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்தார். திடுக்கிட்டு எழுந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மூதாட்டியை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சோழவந்தான் பொலிஸ் நிலையத்தில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த பொலிஸார் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர்.  

அளவுக்கு மீறிய மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கொலை செய்துவிட்டதாக அவன் ஒப்புக்கொண்டான்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .