2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர்

ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு கருத்துச் சொல்கிறேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிதம்பரம் சென்றிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:

''கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தானே புயல், நீலம் புயல், கஜா, நிவர், தற்போது புரெவி புயல் என எந்தப் புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவைக் கொடுத்துச் செல்கிறது. கடலோரம் உள்ளதால் கடலூர் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. எந்தப் புயலாக இருந்தாலும் முதலில் தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடும்.

 பேச்சுவார்த்தை நடந்தும் விவசாயிகள் பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தை முறிந்து விடுகிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக உணர்கிறேன்.

அப்போது செய்தியாளர்கள், ரஜினிகாந்த் அதிமுக கூட்டணி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது பற்றிக் கேட்டதற்கு, ''ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். கட்சியின் பெயரைக் கூறட்டும். தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும். பிறகு எங்கள் கருத்தைக் கூறுகிறேன்'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .