A.K.M. Ramzy / 2021 ஜூன் 20 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., தனது 50ஆவது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது சமூக ஊடகப் பக்கங்களிலும் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; எனது ஆருயிர் இளவல் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின் மேல் அவருக்கு உள்ள ஈடுபாடு மற்றவருக்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல் ராகுல்காந்திக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago