Mithuna / 2024 ஜனவரி 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஷாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் பிரானி உத்யானின் இயக்குனர் மனோஜ் குமார் சுக்லா “இந்த சலுகை ஜனவரி 21ம் திகதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், மிருகக்காட்சிசாலைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டாலும், மிருகக்காட்சிசாலையின் நுழைவு மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுக்லா முடிவு செய்துள்ளார். நுழைவு பிளாசாவில் உள்ள நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago