2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வசமாக சிக்கிய ‘மேக்கப் திருடன்‘

Ilango Bharathy   / 2023 ஜனவரி 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வழக்கறிஞர் முருகன். இவரது மனைவி சரோஜா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வீடுதிரும்பிய அவர், வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் மறைந்திருந்த கொள்ளையன் சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த மூன்று பவுன் நகை மற்றும் ,10,000 ரூபாய் பணத்தைத்  திருடிச் சென்றுள்ளான்.

இந்நிலையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தCCTV  கெமராக்களைப் ஆய்வு செய்த பொலிஸார், நண்பரின்  வீட்டில் பதுங்கி இருந்த ஆனந்த் என்பவனைக் கைது செய்தனர்.

விசாரணையில்‘ நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்த் 2016 ஆம் ஆண்டு சினிமாவய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார் எனவும்,   சினிமாவில் நடனம் ஆடும் மங்கையருக்கும், டிவி சீரியலில் துணை நடிகர் நடிகைகளுக்கும் மேக்கப் போடும்  பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் ‘போதைக்கு அடிமையான அவர் தொழிலில் கவனம் செலுத்தாததால் போதிய பணி கிடைக்கவில்லை என்றும் இந்நிலையில் குறித்த வழக்கறிஞரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாகவும் இதன்போது எதிர்பாராத விதமாக அவரது மனைவி வந்ததால் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க மொட்டை அடித்துக் கொண்டு முக அமைப்புகளை மாற்றி,மேக்கப்போட்டு  மாறுவேடத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .