Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 நவம்பர் 28 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.
அதேபோல் நான்டட் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
4 லட்ச வாக்குகள் வித்தியாசம்: முன்னதாக, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலைச் சந்தித்த வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
46 minute ago
1 hours ago