Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவாவில் இம்மாதம் 14 ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் (08) பாஜகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
குறித்த அறிக்கையில் ”அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு மூன்று சமயல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் கோவா பொருளாதாரம் மேம்படுத்தப்படும் எனவும், அனைவருக்கும் வீட்டு வசதி செய்து தரப்படும் ” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல அடுக்குகளில் உள்ள வறுமை முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும், முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை மாதத்துக்கு 3000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கோவா சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருப்பதால் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
10 minute ago
22 minute ago
24 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
24 minute ago
24 minute ago