Freelancer / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி பகுதியில், வளர்ப்பு மகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட தந்தைக்கு, 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுள்ளது
2017ஆம் ஆண்டு முதல், வளர்ப்பு மகளை குறித்த நபர் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளியாக அடையாங்காணப்பட்டார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (29), நீதிபதி ஏ.எம்.அஷ்ரப், குறித்த நபருக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
போக்சோ சட்டம், ஐபிசி, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அதிகபட்ச தண்டனையாக அவர் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் மற்ற ஆண்டுக்கான சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அத்துடன், 7.85 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago