Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்தை விட அதிக அளவில் சொத்து சேர்த்ததாக முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ரூ.23.85 இலட்சம் ரொக்கப்பணம், 4.87 கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் 136 கனரக வாகனங்களின் ஆவணங்கள், 19 கணினி வன்தட்டுக்கள் (ஹார்ட் டிஸ்க்) வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த பொலிஸார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து கணக்கீடு செய்யும் பணி தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் “இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு வழங்கினேன். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்“ என்று தெரிவித்துள்ளார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago