2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

விவசாயியைப் பார்த்து ’போய்யா’ என திட்டிய அமைச்சர்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி :

திருச்சி மாவட்டத்திலுள்ள  திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  நேரில் பார்வையிடுவதற்காக பாடசாலைக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று மாலை சென்றிருந்தார்.

அப்போது விவசாயி ஒருவர், 'வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி பார்க்க வேண்டும்' எனக் கூற, ஆத்திரம் அடைந்த அமைச்சர் மகேஷ், 'போய்யா' என திட்டினார்.

அதைக் கேட்ட விவசாயி, 'நானும் விவசாயி தான்' எனக் கூற, அமைச்சர் மகேஷ், விவசாயியைப் பார்த்து முறைத்தார். பின்னர் அதன் பொது சில வார்த்தைகளை அள்ளி வீசியுமுள்ளார். இதன்போது பதிவான   வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது தற்போது புதிய பிரச்சினையைத்தோற்றுவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X