Freelancer / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிர்வாகி நியமிக்க விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, பூத் கமிட்டி உறுப்பினர்கள் 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது, பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago