2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’விசாரணையில் திருப்தி இல்லை’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலக்காடு : '

'பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், பொலிஸார் செய்த  விசாரணையில் பூரண திருப்தியில்லை'' என பாரதிய ஜனதா கட்சி  எம்.பி. சுரேஷ் கோபி தனது அதிருப்பதியை வெளியிட்டுள்ளார். 

கேரள மாநிலம் பாலக்காடு, எலப்புள்ளியை சோந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்ஜித் 27, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டுக்கு நேற்று மாலை நடிகரான எம்.பி. சுரேஷ் கோபி வந்தார். சஞ்ஜித் மனைவி தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில் ''சஞ்ஜித் கொலை நடந்த பின் முறையாக விசாரித்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருக்கலாம். கொலையாளிகள் தப்புவதற்கு பொலிஸார் வழி அமைத்துக் கொடுத்துள்ளனர். விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில அரசாங்க விசாரணையில் திருப்தி இல்லை'' இவ்வாறு பாரதிய ஜனதா கட்சி  எம்.பி. சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .