Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 28 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ;
இலங்கை இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், சிவநேசனுக்கு சொந்தமான விசைப்படகில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி அதிகாலையில் நடுக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீனவர்களை உடனே விடுவித்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுமுதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வந்தது.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை சிறையில்இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகமீனவர்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். இதன்போது,அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 5 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, 5 மீனவர்களுக்கும் அங்கு தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 18 மீனவர்களும் நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கையிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago